கனடாவில் காந்தி சிலையை சேதப்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்

கனடாவில் காந்தி சிலையை காலிஸ்தான் ஆதரவாளர்கள் சேதப்படுத்தினர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

ஒட்டாவா,

காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங் பயங்கரவாத குழு ஒன்றை அமைத்து பஞ்சாப்பில் வன்முறையில் ஈடுபட்டு வந்தார். இதனையடுத்து அவரை கைது செய்ய போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக காலிஸ்தான் ஆதரவாளர்கள் இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் தற்போது கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலையை அங்குள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள் உடைத்து சேதப்படுத்தினர்.

கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்களால் காந்தி சில சேதப்படுத்தப்பட்டது இந்த மாதத்தில் இது இரண்டாவது முறையாகும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com