மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு பேரழிவு, ஜனநாயகம் இருக்காது - யஷ்வந்த் சின்ஹா

மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு பேரழிவு, ஜனநாயகம் எங்கும் இருக்காது எனவும் யஷ்வந்த் சின்ஹா விமர்சனம் செய்துள்ளார்.
மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு பேரழிவு, ஜனநாயகம் இருக்காது - யஷ்வந்த் சின்ஹா
Published on

மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தானில் பா.ஜனதா தோல்வியை தழுவியது குறித்து யஷ்வந்த் சின்ஹா பேசுகையில், மோடியின் ஏற்றுக்கொள்ளமுடியாத மாயாஜால கோட்பாட்டை தேர்தல் முடிவுகள் அழித்துள்ளது. 2019 பாராளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையுடன் சேர வழிவகுத்து இருக்கிறது. என்று கூறியுள்ளார்.

தேர்தலுக்கு முந்தைய கூட்டணியை எதிர்க்கட்சிகள் வலுவாக அமைக்க வேண்டும் என்று வலியுறுத்திய யஷ்வந்த் சின்ஹா மோடி அரசு குறித்து பேசுகையில், பிரதமர் மோடி தலைமையில் இரண்டாவது முறை ஆட்சியளிக்க வாய்ப்பு வழங்கினால் மக்களுக்கு அது பேரழிவாகும் என்பது நிரூபனம் ஆகும். நாட்டில் எங்கும் ஜனநாயகம் இருக்காது என்று கூறியுள்ளார். அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் விவகாரத்தை பா.ஜனதா அரசியலுக்காக பயன்படுத்துகிறது எனவும் விமர்சனம் செய்துள்ளார்.

பல்வேறு அரசியல் கட்சிகளை ஒன்றாக இணைக்கும் விவகாரத்தில் முக்கிய பணியை செய்வீர்களா? என்ற கேள்விக்கு இது எதிர்க்கட்சிகளின் நிலைப்பாட்டை பொறுத்தது என்று பதிலளித்துள்ளார். 1998-2004-ல் வாஜ்பாய் தலைமையிலான பா.ஜனதா கூட்டணி அரசில் நிதி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்ஹா கட்சிலிருந்து விலகிவிட்டார். பிரதமர் மோடியையும், இப்போதைய பா.ஜனதா நடவடிக்கையும் சரமாரியாக விமர்சனம் செய்து வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com