இந்த ஆண்டு விமான பயணிகள் எண்ணிக்கை மேலும் குறையும் - அறிக்கையில் தகவல்

இந்த ஆண்டு விமான பயணிகள் எண்ணிக்கை மேலும் குறையும் என்று அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

கடந்த ஆண்டு கொரோனா தொற்று தாக்கத்தின் தொடக்கம் காரணமாக ரத்து செய்யப்பட்ட உள்நாட்டு விமான சேவை, மீண்டும் மே 25-ந் தேதி தொடங்கியது. அதன் பிறகு சீராக அதிகரித்து வந்த உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை, கடந்த பிப்ரவரியில் முந்தைய ஆண்டின் 64 சதவீத அளவை எட்டியது.

ஆனால் கொரோனா 2-வது அலையின் காரணமாக, பல மாநில அரசுகள் புதிதாக கட்டுப்பாடுகளை விதித்தன. அதனால் மறுபடியும் உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டது. இந்த மாதத்தின் 1 முதல் 16-ந் தேதியை முந்தைய ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது 56 சதவீத குறைவு ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில், முதலீட்டு தகவல் மற்றும் கடன் தரநிர்ணய முகமையான இக்ரா, நடப்பு மற்றும் அடுத்த நிதியாண்டுகளில் உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை மேலும் சரியும், வருகிற 2023-ம் நிதியாண்டுக்கு முன்பு அது கொரோனாவுக்கு முந்தைய நிலைக்கு திரும்ப வாய்ப்பில்லை என்று கணித்துள்ளது.

உள்நாட்டில் விமான பயணிகள் எண்ணிக்கை மீண்டும் கொரோனாவுக்கு முந்தைய நிலையை 2023-ம் நிதியாண்டிலும், சர்வதேச விமான பயணிகள் எண்ணிக்கை 2024-ம் நிதியாண்டிலும் எட்டும் என்று கருதுகிறோம் எனவும் இக்ரா தெரிவித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com