பூரி ஜெகநாதருக்கான ரகசிய பூஜைகள் ‘பேஸ்புக்’கில் வெளியீடு

பூரி ஜெகநாதருக்கான ரகசிய பூஜைகள் பேஸ்புக்கில் வெளியிடப்பட்டது. இதை கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பூரி ஜெகநாதருக்கான ரகசிய பூஜைகள் ‘பேஸ்புக்’கில் வெளியீடு
Published on

பூரி,

ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஜெகநாதர் ஆலயம் மிகவும் புகழ்பெற்றது. கோவிலில் அவருக்கு பூஜைகள் நடப்பது வழக்கம். கோவில் பணியாளர்கள் சிலர், பணம் பெற்றுக்கொண்டு இந்த பூஜைகளை தனிநபர்களின் வீடுகளிலும் ரகசியமாக செய்துவந்தது தற்போது அம்பலம் ஆகியுள்ளது.

அப்படி நடத்தப்பட்ட ரகசிய பூஜைகளின்போது, சக பணியாளர் ஒருவர் அதை வீடியோ எடுத்து, தனக்கு தெரிந்தவரிடம் அளித்துள்ளார். அந்த நபர் பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் அந்த பூஜை வீடியோவை வெளியிட்டுள்ளார்.

கவுசிக் என்பவரின் பெயரிலான பேஸ்புக் கணக்கில் அந்த வீடியோ ஒளிபரப்பானது. அதைக்கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தி, கடும் நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com