நடப்பு சீசனை முன்னிட்டு சபரிமலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தயார்

வருகிற 16-ந் தேதி முதல் 2027 ஜனவரி 20-ந் தேதி வரை 9 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
சபரிமலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தயார்
Published on: 

திருவனந்தபுரம்

நிலக்கல்லில் போலீசாருக்கான புதிய கட்டிடத்தை நேற்று உள்துறை மந்திரி ரமேஷ் சென்னித்தலா குத்து விளக் கேற்றி தொடங்கி வைத்தார். விழாவிற்கு பழகுளம் மது எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். முன்னதாக மந்திரி ரமேஷ் சென்னித்தலா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சபரிமலையில் நடப்பு சீசனை முன்னிட்டு பம்பை, நிலக்கல் மற்றும் எருமேலி போன்ற பகுதிகளில் பாதுகாப்பு தொடர் பான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளது.

வருகிற 16-ந் தேதி முதல் 2027 ஜனவரி 20-ந் தேதி வரை 6 கட்டங்களாக சுமார் 9 ஆயிரம் போலீசார் ஏ.டி.ஜி.பி. விஜயன் தலைமையில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வார்கள். அனைத்து இடங்களும் கண்காணிப்பு கேமரா மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X