ஜம்மு காஷ்மீரில் இரண்டு பயங்கரவாதிகளை பாதுகாப்பு படை சுட்டு வீழ்த்தியது

ஜம்மு காஷ்மீரில் இரண்டு பயங்கரவாதிகளை பாதுகாப்பு படை சுட்டு வீழ்த்தியது.
ஜம்மு காஷ்மீரில் இரண்டு பயங்கரவாதிகளை பாதுகாப்பு படை சுட்டு வீழ்த்தியது
Published on

ஸ்ரீநகர்,

குப்புவாரா செக்-போஸ்டில் பாதுகாப்பு படையினரை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். பணியில் இருந்த பாதுகாப்பு படையினர் உடனடியாக பதிலடியை தொடங்கினர். இதனையடுத்து இருதரப்பு இடையே பயங்கர மோதல் வெடித்தது. அப்போது இரண்டு பயங்கரவாதிகளை பாதுகாப்பு படை சுட்டு வீழ்த்தியது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக முழுமையான தகவல் உடனடியாக வெளியாகவில்லை. இருப்பினும் அப்பகுதியில் தேடுதல் மற்றும் பாதுகாப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com