பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, திருப்பதியில் பாதுகாப்பு அதிகரிப்பு

கோடைகால விடுமுறை என்பதால் திருப்பதியில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, திருப்பதியில் பாதுகாப்பு அதிகரிப்பு
Published on

திருப்பதி

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு அருகில் கடந்த 10-ந் தேதி தடையை மீறி டிரோன் ஒன்று பறந்தது. இது பக்தர்களிடையே பீதியை ஏற்படுத்தியது. இது குறித்து திருப்பதி எம்.பி. புகார் தெரிவித்து இருந்தார். இதற்கிடையே, காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் 26 சுற்றுலா பயணிகளை சுட்டுக்கொன்றனர்.

இதன் காரணமாகவும் திருப்பதி கோவிலுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் திருப்பதி கோவிலில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. கோவிலுக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் அலிபிரியில் தீவிர சோதனைக்கு பிறகே மலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகிறது.

கோடைகால விடுமுறை என்பதால் திருப்பதியில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அலிபிரி சோதனை சாவடியில் காலை 8 மணி முதல் 12 மணி வரை வாகனங்கள் பல மணி நேரம் நீண்ட வரிசையில் ஆர்ச் வரை காத்து நின்றன. போதிய அளவு வாகன சோதனை செய்யும் பாதுகாப்பு படையினர் இல்லாததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பக்தர்களிள் வாகனங்கள் திறந்த வெளியில் நிறுத்தப்பட்டுள்ளன. திருப்பதியில் கடும் வெயில் கொளுத்தி வருவதால் பக்தர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com