உள்துறை மந்திரி அமித்ஷா பாதுகாப்பில் குளறுபடி: தெலுங்கானாவில் அதிர்ச்சி சம்பவம்

தெலுங்கானாவில் உள்துறை மந்திரி அமித்ஷா பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

ஐதராபாத்,

உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று முன்தினம் மாலை முதல் தெலுங்கானாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். நேற்று அவர் ஐதராபாத் அருகே பேகம்பேட்டில் உள்ள ஓட்டல் ஒன்றுக்கு சென்றார். அமித்ஷாவின் வாகன அணிவகுப்பு அந்த ஓட்டலுக்கு உள்ளே நுழைய முயன்றபோது, வழியில் இடையூறாக மர்ம கார் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. இதனால் அமித்ஷாவின் வாகன அணிவகுப்பு அங்கேயே நிறுத்தப்பட்டது.

பின்னர் அந்த மர்ம காரை பாதுகாவலர்கள் அப்புறப்படுத்தினர். அந்த கார் ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவர் ஒருவருக்கு சொந்தமானது என கண்டறியப்பட்டு உள்ளது. இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பில் இருக்கும் அமித்ஷாவின் வாகன பாதையில் காரை நிறுத்தி அவரது பாதுகாப்பில் குளறுபடியை ஏற்படுத்தியுள்ள விவகாரம் தெலுங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com