ரெயில் டிக்கெட்டுகள் மீது பாதுகாப்பு வரி ரெயில்வே துறை பரிசீலனை

சமீபகாலங்களாக ரெயில் விபத்துகள் அடிக்கடி நடந்து வருகின்றன. எனவே, விபத்து தவிர்ப்பு நடவடிக்கைகளை முழுவீச்சில் கவனிக்க ரெயில்வே துறை முடிவு செய்துள்ளது.
ரெயில் டிக்கெட்டுகள் மீது பாதுகாப்பு வரி ரெயில்வே துறை பரிசீலனை
Published on

புதுடெல்லி,

சமீபகாலங்களாக ரெயில் விபத்துகள் அடிக்கடி நடந்து வருகின்றன. எனவே, விபத்து தவிர்ப்பு நடவடிக்கைகளை முழுவீச்சில் கவனிக்க ரெயில்வே துறை முடிவு செய்துள்ளது. இதற்கு நடப்பு நிதியாண்டில் ரூ.5 ஆயிரம் கோடி கூடுதல் நிதி தேவைப்படுவதால், பாதுகாப்பு கூடுதல் வரி என்ற பெயரில் ரெயில் டிக்கெட்டுகள் மீது புதிய வரி விதிப்பது பற்றி ரெயில்வே துறை பரிசீலித்து வருகிறது. இதுபற்றி இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

விபத்துகளை தவிர்க்க தண்டவாளம் மற்றும் சிக்னல்களை தரம் உயர்த்துதல், ஆளில்லா லெவல் கிராசிங்குகளை அகற்றுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com