கடூரில் ஆட்டோவில் கடத்திய 70 கிலோ சந்தன மரக்கட்டைகள் பறிமுதல்; தப்பியோடிய 3 பேருக்கு வலைவீச்சு

கடூரில் ஆட்டோவில் கடத்திய 70 கிலோ சந்தன மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.தப்பியோடிய 3 பேருக்கு வலைவீச்சு
கடூரில் ஆட்டோவில் கடத்திய 70 கிலோ சந்தன மரக்கட்டைகள் பறிமுதல்; தப்பியோடிய 3 பேருக்கு வலைவீச்சு
Published on

சிக்கமகளூரு, மே.25-

சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா சக்கராயப்பட்டணா போலீசார் ஜோடிஓச்சஹள்ளி கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படியாக பயணிகள் ஆட்டோ ஒன்று வந்தது. அந்த ஆட்டோவை சோதனை நடத்த நிறுத்தும்படி போலீசார் கையசைத்தனர்.

ஆனால் போலீசாரை கண்டதும் ஆட்டோவை நிறுத்திவிட்டு உள்ளே இருந்த 3 பேர் தப்பிக்க ஓட்டம் பிடித்தனர். இதைபார்த்த போலீசார் 3 பேரையும் விரட்டி பிடிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் 3 பேரும் தப்பியோடிவிட்டனர். இதையடுத்து போலீசார் ஆட்டோவில் சோதனை நடத்தினர்.

அப்போது ஆட்டோவில் 15 சந்தனமரக்கட்டைகள் இருந்தது. அவற்றின் எடை 70 கிலோ இருந்தது. இதையடுத்து போலீசார் ஆட்டோவுடன் சந்தன மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும். இதுகுறித்து சக்கராயப்பட்டணா போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய 3 பேரை வலைவீசி தேடிவருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com