

கொல்கத்தா
மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் 12-வது ஆண்டாக இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பிரதமர் மோடி தலைமையில் கொல்கத்தாவில் யோகா பயிற்சி நடைபெற்றது. இதில் யோகா பயிற்சி நிறுவனங்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட 35 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
இதனை முன்னிட்டு மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அவர் பேசும்போது, புதிய கடல்சார் சகாப்தத்தில் மேற்கு வங்காளம் ஒரு முக்கிய பங்கு வகிக்கும். துறைமுகங்கள், தொழிற்சாலைகள், திறன்கள், கடல்சார் பொருளாதாரம் புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லப்படுவது என அவற்றிற்கான ஆற்றலை அது கொண்டுள்ளது.
வருங்காலத்தில் இந்தியாவின் நீல பொருளாதாரம், கடல்சார் உற்பத்தி, தளவாடங்கள் மற்றும் கடலோர வளர்ச்சிக்கான முக்கிய மையங்களில் ஒன்றாக மேற்கு வங்காளம் திகழும்.
ஆனால், அமைதியை பாதுகாக்க வலிமையும் சம அளவில் அவசியம் என இந்தியா அறிந்திருக்கிறது. வளங்களை பாதுகாப்பதற்கு வீரர்களும், வருங்கால கட்டமைப்புக்கு சுயசார்பும் மிக அவசியம்.
இந்திய கடற்படையில் ஐ.என்.எஸ். ஆகிரே, ஐ.என்.எஸ். துனாகிரி மற்றும் ஐ.என்.எஸ். சான்ஷோதக் ஆகியவை இன்று இணைக்கப்பட்டு உள்ள நிகழ்வு, அந்த ஆற்றலுக்கான அடையாளங்களாக காணப்படுகின்றன என்று கூறினார்.
அவை, 21-ம் நூற்றாண்டில் தன்னுடைய ஆற்றலை அங்கீகரிக்கும் வகையிலான, தன்னுடைய திறனில் நம்பிக்கை கொண்ட மற்றும் புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையுடனுடம், மனவுறுதியுடனும், வேகம், ஆற்றல் மற்றும் தீர்க்கத்துடன் நிலையாக முன்னேறி கொண்டிருக்கும் இந்தியாவை அடையாளப்படுத்துகின்றன என்று அவர் கூறியுள்ளார்.