

புதுடெல்லி,
சுற்றுலா தலங்களில், செல்பி எடுத்தபோது விபத்து ஏற்பட்டு உயிர்ப்பலிகள் நிகழ்ந்து வருகின்றன. எனவே, செல்பி எடுப்பதால் விபத்து நேரும் இடங்களை மாநில அரசுகள் அடையாளம் கண்டறிந்து, அங்கு செல்பிக்கு தடை விதிக்கப்பட்ட பகுதி என்று எச்சரிக்கை பலகைகள் பொருத்துதல், தன்னார்வ தொண்டர்களை நிறுத்துதல், மைக்கில் எச்சரிக்கை விடுத்தல், தடுப்புகள் அமைத்தல் போன்ற முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மத்திய சுற்றுலா அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.