டெல்லியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சாமியார் கைது

டெல்லியில் கோவிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சாமியார் கைது செய்யப்பட்டார்.
டெல்லியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சாமியார் கைது
Published on

புதுடெல்லி,

டெல்லியின் பதேப்பூர் பெரியில் உள்ள கோவிலில் நப்பே பகத் (வயது 42) என்கிற சாமியார் பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறிவந்தார். அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த மாதம் உடல் நலம் பாதிக்கப்பட்ட மகனை சாமியாரிடம் அழைத்து சென்றுள்ளார். அப்போது தன்னுடைய உறவினரின் 15 வயது சிறுமியையும் அழைத்து சென்றுள்ளார். அப்போது கோவிலில் சாமியார் நப்பே பகத், அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். மேலும் இது குறித்து யாரிடமாவது கூறினால் கொலை செய்துவிடுவேன் என்றும் அவர் சிறுமியை மிரட்டியுள்ளார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி உறவுக்கார பெண்ணிடம் தெரிவித்துள்ளார். போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து போஸ்கோ சட்டத்தின் கீழ் சாமியார் நப்பே பகத் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸ் அதிரடியாக கைது செய்துள்ளது. போலீசார் நப்பே பகத்திடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com