

புதுடெல்லி,
டெல்லியில் உள்ள யஷோ பூமியில் இந்தியா சார்பில் நடைபெ றும் "செமிகான் இந்தியா 2026" மாநாடு இன்று முதல் (வியாழக்கிழமை) 19-ந் தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டை பிரதமர் மோடி இன்று காலை 10 மணிக்கு தொடங்கி வைத்து பேசுகிறார்.
இந்த மாநாடு இந்தியாவில் ஒத் துழைப்பு, முதலீடு, புத்தாக்கம் மற்றும் திறமை மேம்பாட்டை முன்னெடுத்துச் செல்வதில் கவனம் செலுத்துகிறது. மாநாட்டையொட்டி கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த கண்காட்சியில் 600-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
இது மட்டுமின்றி 52 நாடுகளின் பிரதிநிதிகள், 400-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் 150-க்கும் மேற்பட்ட பேச்சாளர்கள் கலந்து கொள்கிறார்கள். சுமார் 50,000 பார்வையாளர்களும் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.