கூடுதலான ஆக்சிஜன் சிலிண்டர்களை டெல்லிக்கு அனுப்புங்கள்: ரமேஷ் சென்னிதாலா

கெஜ்ரிவாலின் வேண்டுகோளை அடுத்து கூடுதலான ஆக்சிஜன் சிலிண்டர்களை டெல்லிக்கு அனுப்பி வைக்கும்படி கேரள முதல் மந்திரியிடம் எதிர்க்கட்சி தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கூடுதலான ஆக்சிஜன் சிலிண்டர்களை டெல்லிக்கு அனுப்புங்கள்: ரமேஷ் சென்னிதாலா
Published on

புதுடெல்லி,

டெல்லியில் கொரோனா பாதிப்புகளால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 357 பேர் உயிரிழந்து உள்ளனர். இது ஒரு நாளில் மிக அதிக அளவாகும். டெல்லியில் உள்ள மருத்துவமனைகள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் திணறி வருகின்றன.

இந்த சூழலில், டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், கூடுதலாக உள்ள ஆக்சிஜன் சிலிண்டர்களை வழங்கும்படி பிற மாநில முதல் மந்திரிகள் அனைவருக்கும் கடிதம் எழுதியுள்ளேன். எங்களுக்கு மத்திய அரசும் உதவி செய்து வருகிறது.

எனினும், எங்களுக்கு கிடைக்க கூடிய அனைத்து உதவிகளும் போதிய அளவில் இல்லை என நிரூபிக்கும் வகையில் டெல்லியில் கொரோனா பாதிப்புகளின் தீவிரம் உள்ளது என்று அவர் தெரிவித்து உள்ளார்.

கேரளாவில் எதிர்க்கட்சி தலைவராக இருப்பவர் ரமேஷ் சென்னிதாலா. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், லட்சக்கணக்கான கேரளவாசிகளை உள்ளடக்கிய டெல்லி நெருக்கடியான கட்டத்தில் உள்ளது.

ஆக்சிஜன் பற்றாக்குறையால் டெல்லியில் பலர் உயிரிழந்து வருகின்றனர். அதனால், நாம் கூடுதலாக வைத்துள்ள ஆக்சிஜனை டெல்லிக்கு அனுப்பி வைக்கும்படி கேரள அரசிடம் வேண்டுகோள் வைக்கிறேன். கேரள இல்லத்தில் மருத்துவ வசதி அமைப்பொன்றை உருவாக்கி வைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com