காங். மூத்த தலைவர் அகமது படேல் காலமானார்

காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் காலமானார். அவருக்கு வயது 71.
காங். மூத்த தலைவர் அகமது படேல் காலமானார்
Published on

புதுடெல்லி,

காங்கிரஸ் எம்.பி. அகமது படேல்(71). கடந்த அக்டோபர் 1-ம் தேதி கொரோனாவில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்தாலும், கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளால் கடுமையாக பாதிக்கப்பட்டார்.

அகமது படேலின் நுரையீரல் கடுமையாகப் பாதிக்ககப்பட்டநிலையில் அந்த பாதிப்பு மற்ற உடல் உறுப்புகளும் பரவியது. இதையடுத்து,குர்கோவனில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் கடந்த 14 ஆம் தேதி அகமது படேல் சிகிச்சைக்காக திடீரென அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்த போதிலும் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் அகமது படேல் இன்று அதிகாலை 3.30 மணியளவில் உயிரிழந்தார். இந்தத் தகவலை அகமது படேலின் மகன் பைசல் படேல் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com