காங்கிரசின் மூத்த தலைவர் ஜி.எஸ். பாலி உடல்நல குறைவால் காலமானார்

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் ஜி.எஸ். பாலி உடல்நல குறைவால் டெல்லியில் காலமானார்.
காங்கிரசின் மூத்த தலைவர் ஜி.எஸ். பாலி உடல்நல குறைவால் காலமானார்
Published on

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் ஜி.எஸ். பாலி (வயது 67). நீண்டகாலம் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இந்த நிலையில், இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். இதனை டுவிட்டர் வழியே, அவரது மகன் ரகுபீர் சிங் பாலி உறுதி செய்துள்ளார். அந்த பதிவில், எனது அன்பிற்குரிய தந்தை மற்றும் உங்கள் அனைவருக்கும் அன்பானவரான ஜி.எஸ். பாலி நம்முடன் இல்லை என கனத்த இதயத்துடன் தெரிவித்து கொள்கிறேன்.

அவர் இந்த உலகில் இல்லையெனினும், அவர் கூறிய விசயங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் தொடர்ந்து என்றும் நம்முடன் இருக்கும் என தெரிவித்து உள்ளார். அவர், இமாசல பிரதேசத்தின் காங்ரா நகரில் கடந்த 1954ம் ஆண்டு பிறந்தவர் ஆவார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com