ஐதராபாத்தில் அருகே ஏரோஸ்பேஸ் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு

தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் நிறுவனத்தில் அதிக அளவில் ஊழியர்கள் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
ஐதராபாத்தில் அருகே ஏரோஸ்பேஸ் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு
Published on

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள அதிபத்லா பகுதியில், கவுரா(Goura) என்ற நிறுவனத்திற்கு சொந்தமான ஏரோஸ்பேஸ் நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தில் இன்று அதிகாலை எதிர்பாராத விதமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

அங்குள்ள இயந்திரத்தை இயக்கியபோது ஷாட் சர்கியூட் ஆகி, அதன் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் நிறுவனத்தில் அதிக அளவில் ஊழியர்கள் இல்லாததால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர், நீண்ட நேரமாக போராடி பற்றி எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com