மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு புதிய உச்சத்தினை தொட்டது

மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு இன்று புதிய உச்சத்தினை தொட்டுள்ளது.
மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு புதிய உச்சத்தினை தொட்டது
Published on

மும்பை,

மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு 184.98 புள்ளிகள் உயர்ந்து 37,876.87 புள்ளிகளாக உள்ளது. இதற்கு முந்தைய உச்சத்தினை விட இது உயர்ந்த அளவாகும்.

உலோகம், தகவல் தொழில்நுட்பம், நுகர்வோர் பொருட்கள், ரியல் எஸ்டேட் மற்றும் எண்ணெய் மற்றும் வாயு உள்ளிட்ட துறைகள் 1.46 சதவீத லாபத்துடன் இயங்கி வருகின்றன.

இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 41.85 புள்ளிகள் உயர்ந்து 11,428.95 புள்ளிகளாக உள்ளது.

நேற்று மும்பை பங்கு சந்தையில் வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு இதற்கு முன் இல்லாத வகையில் புதிய உச்சத்தினை அடைந்து இருந்தது. நேற்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு 222.03 புள்ளிகள் உயர்ந்து 37,778.19 புள்ளிகளாக இருந்தது.

இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு நேற்று முதன்முறையாக 11,400 புள்ளிகளை எட்டியிருந்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com