மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு 130.31 புள்ளிகள் உயர்வு

மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 130.31 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டு உள்ளது. #BSESensex
மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு 130.31 புள்ளிகள் உயர்வு
Published on: 

மும்பை,

மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு 130.31 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. இதனால் சென்செக்ஸ் மதிப்பு 33,918.85 ஆக உள்ளது.

மொத்தம் 30 பங்குகள் கொண்ட சென்செக்ஸ் வர்த்தகத்தில் ஆக்சிஸ் வங்கி, அதானி போர்ட்ஸ், டாடா ஸ்டீல், எல் அண்டு டி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, யெஸ் வங்கி, கோடக் வங்கி, டி.சி.எஸ்., பவர் கிரிட், பஜாஜ் ஆட்டோ, சன் பார்மா மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்டவை 2.41 சதவீத லாபத்துடன் இயங்கின.

இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 38.30 புள்ளிகள் உயர்ந்து 10,418.15 புள்ளிகளாக உள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் 14 பைசாக்கள் உயர்ந்து 64.88 ஆக காணப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com