கோவோவாக்ஸ் தடுப்பூசியை ஏற்றுமதி செய்ய சீரம் நிறுவனத்துக்கு அனுமதி

அமெரிக்காவுக்கு கோவோவாக்ஸ் தடுப்பூசியை ஏற்றுமதி செய்ய சீரம் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

கோவோவாக்ஸ் கொரோனா தடுப்பூசியை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய அதை உற்பத்தி செய்யும் சீரம் நிறுவனம் மத்திய அரசிடம் அனுமதி கோரியிருந்தது.

அதற்கு தற்போது மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

அதன்படி, 32.4 லட்சம் 'டோஸ்' கோவோவாக்ஸ் தடுப்பூசி 'நுவாக்சோவிட்' என்ற பிராண்ட் பெயரில் அமெரிக்காவுக்கு நாளை ஏற்றுமதி செய்யப்படும். அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் முதல் இந்திய கொரோனா தடுப்பூசி இது என்று சீரம் நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன

X

Daily Thanthi
www.dailythanthi.com