

கர்நாடகாவில் மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகிவரும் துங்கா ஆறு ஆயிரக்கணக்கான ஹெக்டேர் பரப்பளவிலான விவசாய நிலங்களுக்கு பாசன வசதியை கொடுக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் குடிநீர் வசதியை பெறுகிறார்கள். இப்போது ஆறு பச்சையாக மாறியது, மீன்கள் எல்லாம் செத்து மிதப்பது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவங்களை அடுத்து பொதுமக்கள் நீரை பயன்படுத்த மிகவும் அச்சம் கொண்டுள்ளனர்.
ஆற்றுநீர் கடந்த 5, 6 நாட்களாக பச்சையாக மாறியது. மீன்கள் இறந்து வருகிறது. ஆற்று நீரை நாங்கள் நேரடியாகவே குடிநீருக்கு பயன்படுத்தி வருகிறோம். இப்போது மிகவும் அச்சமாக உள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தோம். அவர்கள் இங்கு வந்து சோதனைக்காக மாதிரிகளை எடுத்துச் சென்றுள்ளனர். தேவையான உதவிகளை செய்வதாக உறுதியளித்துள்ளனர் என கிராம மக்கள் கூறியுள்ளனர்.