கர்ப்பிணியான வன சரக பெண் அதிகாரி மீது கடும் தாக்குதல்; தம்பதி கைது

3 மாத கர்ப்பிணியான வன சரக பெண் அதிகாரியை தாக்கிய வழக்கில் தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர்.
கர்ப்பிணியான வன சரக பெண் அதிகாரி மீது கடும் தாக்குதல்; தம்பதி கைது
Published on

சட்டாரா,

மராட்டியத்தின் சட்டாரா பகுதியை சேர்ந்த வன சரக பெண் அதிகாரி சிந்து சனாப். காட்காவன் வன பகுதியில் பணியாற்றி வருகிறார்.

3 மாத கர்ப்பிணியான இவரை பணி முடிந்து வரும்போது, கணவன் மற்றும் மனைவி என இரண்டு பேர் கடுமையாக தாக்கியுள்ளனர். இதுபற்றி சிந்து கூறும்போது, பணியில் சேர்ந்தது முதல், அந்த நபர் என்னை அச்சுறுத்துவதும், பணம் கேட்டு தொந்தரவு செய்தும் வந்துள்ளார்.

எனினும், இதற்கு நான் உடன்படவில்லை. நேற்று பணி முடிந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தேன். என்னை அவர்கள் அடித்தனர். என்னுடைய கணவரை காலணிகளால் தாக்கினர் என்று கூறியுள்ளார்.

இந்த வழக்கில் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ள நபரான ராமசந்திர ஜான்கர், முன்னாள் பஞ்சாயத்து தலைவராகவும், உள்ளூர் வன குழு உறுப்பினராகவும் உள்ளார். ராமசந்திர ஜான்கர் மற்றும் அவரது மனைவி பிரதீபா ஜான்கர் இருவரும் இந்த சம்பவத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com