காளி சிலையின் காலடியில் மனித தலை நரபலியா...! போலீசார் விசாரணை

தெலுங்கானா மாநிலத்தில் காளி சிலையின் காலடியில் மனித தலை கண்டெடுக்கப்பட்டது நரபலியா என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காளி சிலையின் காலடியில் மனித தலை நரபலியா...! போலீசார் விசாரணை
Published on

ஐதராபாத்

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் ஐதராபாத்தை நாகார்ஜுன சாகருடன் இணைக்கும் நெடுஞ்சாலைக்கு அருகில் இந்த கோவில் அமைந்துள்ளது. அங்குள்ள காளி சிலையின் காலடியில் நேற்று ஒரு மனிதனின் துண்டிக்கப்பட்ட சிலை வைக்கப்பட்டிருந்தது. இதை பார்த்த கோவில் பூசாரி போலீசாருக்கு தகவல் அளித்தார். இதையடுத்து விரைந்து சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

காளி தேவி சிலையின் காலடியில் மனித தலை வைக்கப்பட்ட விதம் நரபலியாக இருக்குமா என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது.

உயிரிழந்தவரை அடையாளம் காண 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், உடலின் எஞ்சிய பாகம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.

அந்த நபர் நான்கு முதல் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தனது வீட்டை விட்டு வெளியேறி வெவ்வேறு இடங்களில் வசித்து வந்துள்ளார். "இதுவரை, தலை மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, மீதமுள்ள பாகங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை," என்று டிஎஸ்பி கூறினார்.

மேலும் தேவரகொண்டா டிஎஸ்பி தெரிவித்துள்ளதாவது:-

கொலை செய்யப்பட்ட அந்த நபருக்கு 30 வயது இருக்கும். அந்த நபர் வேறு இடத்தில் கொலை செய்யப்பட்டிருக்கலாம். அவரது தலை சம்பவ இடத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கிறோம். அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சிசிடிவி காட்சிகள் மூலம் இதுவரை எந்த தடயமும் கிடைக்கவில்லை,. தலை துண்டிக்கப்பட்ட நபரின் உடலை இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்றும், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் இருந்து காட்சிகளை ஆய்வு செய்து உடலை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

கொலை செய்யப்பட்ட நபரின் அடையாளத்தை உறுதிப்படுத்தவும், இந்த கொடூர குற்றத்தை செய்தவர்களை பிடிக்கவும் எட்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சிலையின் காலடியில் துண்டிக்கப்பட்ட தலை குறித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

போலீசாரும் அந்த நபரின் அடையாளத்தை உறுதிப்படுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com