அறையில் அடைத்து பல நாட்களாக பாலியல் வன்கொடுமை... நண்பர்களிடம் மனைவியை விற்ற சைக்கோ கணவர்

திருமணம் நடந்து 12 ஆண்டுகள் ஆனபோதும், வேறு சமூக பெண்கள் 2 பேரிடம் தகாத உறவில் இருந்துள்ளான்.

அறையில் அடைத்து பல நாட்களாக பாலியல் வன்கொடுமை... நண்பர்களிடம் மனைவியை விற்ற சைக்கோ கணவர்
Published on

பலான்பூர்

குஜராத்தின் பலான்பூர் நகரில் வசித்து வருபவர் நிகேஷ் பட்டேல். 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவருடைய மனைவியை காணவில்லை என போலீசில் புகார் அளித்துள்ளார். இதுபற்றி அவர்கள் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

நிகேஷ், அவருடைய நண்பர்களான சஞ்சய் தாகூர், அஷோக் தாகூர் மற்றும் சச்சின் தாகூர் ஆகியோரிடம் ரூ.50 ஆயிரம் பணம் பெற்று கொண்டு மனைவியை விற்று விட்டார். அவரை அறையில் அடைத்து வைத்த நிகேஷின் நண்பர்கள் அடுத்தடுத்து பாலியல் வன்கொடுமை, கூட்டு பாலியல் வன்கொடுமை என பல கொடுமைகளை செய்துள்ளனர். 7 நாட்களாக இந்த கொடூரம் தொடர்ந்துள்ளது.

அவருடைய காதணிகளையும் திருடி கொண்டனர். இந்த வழக்கில் தீவிர விசாரணை செய்து, மறைத்து வைக்கப்பட்ட அந்த பெண்ணை மீட்டு கவுன்சிலிங் வழங்கி வரும் போலீசார் குற்ற சம்பவத்துடன் தொடர்புடைய 10 பேரை கைது செய்தனர்.

தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரெண்டு கேமித் கூறும்போது, நிகேஷ் சைக்கோ மனநிலையுடன் இருந்துள்ளான். திருமணம் நடந்து 12 ஆண்டுகள் ஆனபோதும், வேறு சமூக பெண்கள் 2 பேரிடம் தகாத உறவில் இருந்துள்ளான். மனைவியை பிடிக்கவில்லை என்பதற்காக அவரை விவாகரத்து செய்ய விரும்பியுள்ளான்.

ஆனால், இந்த முடிவை எடுத்திருக்கிறான். மனைவியை நண்பர்களிடம் விற்று விட்டு, பணம் பெற்று கொண்டு, வேறொரு பெண்ணை வீட்டுக்கு கொண்டு வர விரும்பியுள்ளான் என்று கூறியுள்ளார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com