கோவாவில் பாலியல் கொடூரம்: பாஜக கவுன்சிலர் மகன் மீது 2 சிறுமிகள் புகார்

இந்த வழக்கின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு விசாரணை, குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
கோவாவில் பாலியல் கொடூரம்: பாஜக கவுன்சிலர் மகன் மீது 2 சிறுமிகள் புகார்
Published on

பனாஜி,

கோவா மாநிலத்தின் குஷாவதி மாவட்டத்தை காக்கோராவில் மாதேகல் பகுதியை சேர்ந்தவர் சோகம் நாயக் (20), அவரின் தந்தை சுஷாந்த் நாயக், அப்பகுதி நகராட்சி பா.ஜ.க. கவுன்சிலர் ஆவார்.

இந்தநிலையில் சோகம் நாயக் சில வீடியோக்களை சமுக வலைதளத்திலும் பதிவு செய்திருந்ததாக கூறப்படுகிறது. அந்த அபாசமான வீடியோக்களில் உள்ளூர் சிறுமிகள் இருப்பதும் தெரிய வந்தது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் காட்டு தீயென பரவியது. இதனை அறிந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனை தொடர்ந்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனார்.

முதலில் சோகம் நாயக் மீது முறையான புகார் இல்லாததால், போலீசார் நாயக்கை கைது செய்யவில்லை. மறுநாள் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இரண்டு சிறுமிகள் புகார் அளித்தை தொடர்ந்து போலீசார் குற்றவாளி மீது போக்‌சோ மற்றும் சில கடுமையான சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து உடனடியாக கைது செய்தனர்.

மேலும் இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மைனர் சிறுமிகள் போலீசாரிடம் தனது நேரடி வாக்குமூலம் அளித்தனர். அதில் கடந்த மூன்று ஆண்டுகளாக சோகம் நாயக் தங்களை மிரட்டி வந்ததாகவும், தங்களின் ஆபாச வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளிவிடுவேன் என பயமுறுத்தி பாலியல் சிண்டலில் ஈடுபட்டதாகவும் அந்த சிறுமிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் பல பெண்கள் பாதிக்கப்பட்டு இருப்பதும், குற்றாவாளியின் தந்தையின் அரசியல் பின்னணியாலும். இந்த வழக்கின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு விசாரணை, குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com