பாலியல் புகார்கள்: ‘மீ டூ’ வழக்கை விசாரிக்க டெல்லி ஐகோர்ட்டு மறுப்பு

சமூக ஊடகங்களில் பாலியல் புகார்களுக்கு காரணமான, மீ டூ வழக்கை விசாரிக்க டெல்லி ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்தது.
பாலியல் புகார்கள்: ‘மீ டூ’ வழக்கை விசாரிக்க டெல்லி ஐகோர்ட்டு மறுப்பு
Published on

புதுடெல்லி,

பாலியல் தொல்லைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள் மீ டூ என்னும் இயக்கம் மூலம் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் சமூக ஊடகங்கள் மூலம் இதுபோல் கூறப்படும் புகார்கள் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையமும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சகமும் தங்கள் கடமையைச் செய்ய தவறி விட்டன. எனவே இவை தாமாக முன்வந்து நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்த உத்தரவிடவேண்டும் என்று கோரி ஜோகிந்தர் குமார் சுகிஜா என்ற வக்கீல் டெல்லி ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன், நீதிபதி வி.கே.ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் இந்த மனு ஏற்கத்தக்கது அல்ல. எங்களது நேரத்தை வீணடிக்காதீர்கள். பாதிக்கப்பட்ட பெண் இருந்தால் அவர் கோர்ட்டில் வழக்கு தொடரட்டும் என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com