பாலியல் துன்புறுத்தல் வழக்கு: நாகாலாந்து ஐ.ஏ.எஸ். அதிகாரி பணியிடை நீக்கம்

நாகாலாந்து மாநில நிதித்துறையில் செயலாளராக பணியாற்றிய ரெனி வில்பிரட் மீது, பாலியல் துன்புறுத்தல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பாலியல் துன்புறுத்தல் வழக்கு: நாகாலாந்து ஐ.ஏ.எஸ். அதிகாரி பணியிடை நீக்கம்
Published on

கோஹிமா,

நாகாலாந்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி மீது பதிவு செய்யப்பட்ட பாலியல் துன்புறுத்தல் புகார் தொடர்பாக குற்றவியல் விசாரணை தொடங்கப்பட்டதை அடுத்து, அவரை பணியிடைநீக்கம் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

நாகாலாந்து மாநில நிதித்துறையில் செயலாளராக பணியாற்றிய ரெனி வில்பிரட் மீது, பாலியல் துன்புறுத்தல் மற்றும் பெண்களை அவமதித்ததற்கான பிஎன்எஸ் பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று அம்மாநில தலைமைச் செயலாளர் ஜே ஆலம் வெளியிட்ட பணியிடை நீக்க உத்தரவில் தெரிவித்துள்ளார்.

அந்த உத்தரவில், "நாகாலாந்து அரசு, 21.05.2025 தேதியிட்ட உத்தரவு எண்.PAR-A/06/2021-AIS-ன் படி, 21.05.2025 முதல் ரெனி வில்பிரட், ஐ.ஏ.எஸ்.ஐ இடைநீக்கம் செய்துள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com