

கோழிக்கோடு,
கேரளம் மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர் முகமது நூர்(வயது 45). ஆட்டோ டிரைவர். இந்தநிலையில் சேவாயூர் பகுதியை சேர்ந்த தம்பதி, தங்களது 12 வயது மகள் அருகே உள்ள பள்ளிக்கூடத்தில் 6-ம் வகுப்பு படித்து வரும் நிலையில் நேற்றுமுன்தினம் காலை தேர்வு எழுத பள்ளிக்கூடத்திற்கு ஆட்டோவில் அனுப்பி வைக்க முடிவு செய்தனர்.
அதன்படி அவர்கள் முகமது நூரை அழைத்து, மகளை ஆட்டோவில் பள்ளிக்கூடத்தில் விட கூறினர். இதன்படி முகமது நூரும் சிறுமியை ஆட்டோவில் ஏற்றி பள்ளிக்கூடத்திற்கு அழைத்து சென்றார். அப்போது செல்லும்வழியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து அவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதுகுறித்து சேவாயூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் முகமது நூரை கைது செய்தனர்.