இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை; ஊழியர் கைது; இந்து அமைப்பினர் போராட்டம்-பரபரப்பு

புத்தூர் அருகே பல்பொருள் அங்காடிக்கு பொருட்கள் வாங்க வந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஊழியர் கைது செய்யப்பட்டார். இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை; ஊழியர் கைது; இந்து அமைப்பினர் போராட்டம்-பரபரப்பு
Published on

மங்களூரு;

இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை

தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூர் தாலுகா திங்கலாடியில் பல்பொருள் அங்காடி உள்ளது. இந்த பல்பொருள் அங்காடியின் உரிமையாளர் ஹமீத்.

இந்த பல்பொருள் அங்காடிக்கு நேற்றுமுன்தினம் சர்வே கிராமம் நெரலகட்டேவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் பொருட்கள் வாங்க வந்தார். அப்போது பல்பொருள் அங்காடியில் வேலை பார்த்த பத்ருதீன், இளம்பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

கைது

இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் கூச்சலிட்டு அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்ததும், பத்ருதீன் தப்பியோடிவிட்டார். இதுபற்றி இந்து அமைப்பினருக்கு தெரியவந்தது. அவர்கள் சம்பந்தப்பட்ட பல்பொருள் அங்காடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அப்போது அவர்கள் பத்ருதீனை கைது செய்யவேண்டும் என்று வலியுறுத்தினர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சம்பியா போலீசார் பத்ருதீனை கைது செய்தனர். இதுகுறித்து சம்பியா போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த சம்பவம் அறிந்த புத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. சஞ்சீவ மடந்தூர் கண்டனம் தெரிவித்து கடும் நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com