புகார் கொடுக்க சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: சப்-இன்ஸ்பெக்டர் இடைநீக்கம்

உயர் அதிகாரிகளிடம் பெண் புகார் அளித்தார்.
புகார் கொடுக்க சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: சப்-இன்ஸ்பெக்டர் இடைநீக்கம்
Published on: 

பாட்னா,

பீகாரின் முசாபர்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட அகியாபூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ் பெக்டராக பணியாற்றி வந்தவர் லாலன் குமார். இவரிடம் பெண் ஒருவர் வழக்கு ஒன்றில் புகார் அளித்திருந்தார். பின்னர் அந்த பெண்ணுக்கு செல்போனில் ஆபாச குறுந்தகவல்கள் மற்றும் அழைப்புகள் மூலம் லாலன் குமார் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

இது குறித்து அந்த பெண் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ் பெக்டருக்கு எதிராக துறை ரீதியான விசாரணை நடந்தது. அதைத்தொடர்ந்து உயர் அதிகாரி கள் சப்-இன்ஸ்பெக்டரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர்.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com