

போர்ட் பிளேர்,
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வரும் செப்டம்பர் மாதம் மத்தியில் அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள் பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவகல்கள் வெளியாகியுள்ளன. தனது பயணத்தின் போது தேசிய நினைவு செல்லுலார் சிறைச்சாலையை அமித்ஷா பார்வையிட உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.
தொடர்ந்து உள்ளூர் பாஜக தலைவர்களுடன் ஆலோசனயும் நடத்த உள்ளார். அமித்ஷா வருகைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த திட்டங்களை யூனியன் பிரதேச நிர்வாகம் மேற்கொண்டு வருவதாகாவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அமித்ஷா வருகையையொட்டி அனைத்து விடுப்பு விண்ணப்பங்களையும் நிறுத்தி வைக்குமாறு அரசின் அனைத்து துறை ஊழியர்களுக்கும் யூனியன் பிரதேச நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.