நடிகர் ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது


நடிகர் ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது
x

கோப்புப்படம்

தினத்தந்தி 12 Nov 2024 11:16 AM IST (Updated: 12 Nov 2024 12:36 PM IST)
t-max-icont-min-icon

நடிகர் ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சத்தீஸ்கரை சேர்ந்த வழக்கறிஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பை,

நடிகர் சல்மான்கானுக்கு தொடர்ச்சியாக கொலை மிரட்டல்கள் வந்துகொண்டிருக்கின்றன. சமீபத்தில்கூட ரூ.5 கோடி கேட்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மிரட்டல் விடுத்தவர் மராட்டிய அமைச்சர் பாபா சித்திக் கொலையில் தொடர்புடைய லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் என்று கூறியதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து சல்மான் கானுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் வந்துது. அடையாளம் தெரியாத நபர் ரூ. 50 லட்சம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து மும்பை பந்த்ரா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சைபர் குற்றப்பிரிவு போலீசாருடன் இணைந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் இருந்து அந்த அழைப்பு வந்துள்ளதாக கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் நடிகர் ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை கைது செய்துவிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் நகரில் வசித்து வரும் முகமது பைசான் கான் என்ற வழக்கறிஞர்தான் மிரட்டல் விடுத்ததாக அவரது வீட்டில் வைத்து போலீசார் அவரை கைது செய்துள்ளனர். முன்னதாக, கொலை மிரட்டல் அழைப்பு விடுக்கப் பயன்படுத்தப்பட்ட தொலைபேசியை ஏற்கனவே தொலைத்துவிட்டதாக அவர் போலீசாரிடம் கூறியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story