இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே உள்ளூரில் கிரிக்கெட் போட்டிகள் நடப்பதற்கு சாத்தியமில்லை: அமித் ஷா

இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே மீண்டும் உள்ளூரில் போட்டிகள் நடப்பதற்கான சாத்தியமில்லை என அமித் ஷா கூறினார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே உள்ளூரில் கிரிக்கெட் போட்டிகள் நடப்பதற்கு சாத்தியமில்லை: அமித் ஷா
Published on

மும்பை,

இங்கிலாந்து நாட்டில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் முறையே வங்காளதேசம் மற்றும் இங்கிலாந்து அணிகளை அரை இறுதி போட்டிகளில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறின.

இந்த இரு அணிகளுக்கும் இடையிலான இறுதி போட்டி நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில், குஜராத் கிரிக்கெட் கூட்டமைப்பின் தலைவராக உள்ள பாரதீய ஜனதாவின் தலைவர் அமித் ஷா இன்று மும்பைக்கு வந்துள்ளார்.

அவர் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து விளையாடும். ஆனால் பாகிஸ்தானில் இந்திய அணியோ அல்லது இந்தியாவில் பாகிஸ்தான் அணியோ விளையாடாது என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com