தீயசக்தியிடம் சரண் அடையாமல் தொடர்ந்து போராடுங்கள்: தொண்டர்களுக்கு மம்தா பானர்ஜி அறிவுரை

சாமானியர்களுக்கான வாழ்நாள் போராட்டத்தை தொடருவோம் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆண்டு விழாவில் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

கொல்கத்தா,

கடந்த 1998-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை மம்தா பானர்ஜி தொடங்கினார். அதன் 27-வது ஆண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, அக்கட்சி தலைவரும், மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி, தனது 'எக்ஸ்' வலைத்தள பக்கத்தில், "கட்சியின் ஒவ்வொரு தொண்டர் மற்றும் ஆதரவாளரின் தியாகத்தையும், அர்ப்பணிப்பு உணர்வையும் நான் மதிக்கிறேன். இன்று, நமது திரிணாமுல் காங்கிரஸ், அனைவரது பாசத்தாலும், நேசத்தாலும் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. உங்களது தளராத ஆதரவால், சாதாரண மக்களுக்காக தொடர்ந்து போராடுவோம். எந்த தீயசக்தியிடமும் சரண் அடையாமல் தொடர்ந்து போராடுங்கள். அனைத்து அச்சுறுத்தல்களையும் மீறி, சாமானியர்களுக்கான வாழ்நாள் போராட்டத்தை தொடருவோம்" என்று அதில் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com