'சந்தேஷ்காளி சகோதரிகளை திரிணாமுல் காங்கிரஸ் நடத்திய விதம் வெட்கக்கேடானது' - பிரதமர் மோடி

மேற்கு வங்கத்தின் இன்றைய நிலையை நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்தார்.
Image Courtesy : ANI
Image Courtesy : ANI
Published on

கொல்கத்தா,

மேற்கு வங்க மாநிலம் அரம்பாக் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது சந்தேஷ்காளி விவகாரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கை குறித்து கடுமையாக விமர்சித்தார். இது தொடர்பாக பிரதமர் மோடி பேசியதாவது;-

"மேற்கு வங்கத்தின் இன்றைய நிலையை ஒட்டுமொத்த நாடும் பார்த்துக் கொண்டிருக்கிறது. சந்தேஷ்காளியின் சகோதரிகளுக்கு திரிணாமுல் காங்கிரஸ் செய்ததைப் பார்த்து நாட்டு மக்கள் வருத்தமும், கோபமும் கொண்டுள்ளனர்.

சந்தேஷ்காளி சகோதரிகளை திரிணாமுல் காங்கிரஸ் நடத்திய விதம் வெட்கக்கேடானது. 'இந்தியா' கூட்டணி தலைவர்களைப் பொறுத்தவரை, சந்தேஷ்காளியில் திரிணாமுல் காங்கிரசால் சித்திரவதை செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக நிற்பதை விட, ஊழல்வாத அரசியலை ஆதரிப்பதுதான் அவர்களுக்கு முதன்மையானது.

தங்களுக்கு சிறுபான்மையினரின் ஆதரவு இருப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நம்புகிறது. ஆனால் இஸ்லாமியர்களும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் குண்டர் ஆட்சிக்கு எதிராகவே வாக்களிப்பார்கள்."

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com