மாற்று அரசைக் கொடுக்கும் ஆற்றல் காங்கிரஸ்சுக்கு கிடையாது - ஐக்கியஜனதா தளம்

மாற்று அரசைக் கொடுக்கும் ஆற்றல் காங்கிரஸ் கட்சிக்கு கிடையாது என்று ஐக்கிய ஜனதா தளம் தெரிவித்துள்ளது.
மாற்று அரசைக் கொடுக்கும் ஆற்றல் காங்கிரஸ்சுக்கு கிடையாது - ஐக்கியஜனதா தளம்
Published on

பட்னா

காங்கிரஸ் பலமுறை முயன்றும் பரந்த எதிர்க்கட்சிகள் கூட்டணியை அமைப்பதில் தோல்வி கண்டுள்ளது. காங்கிரஸ் மத்தியில் கூட்டணி அரசுகளை உருவாக்கி பின்னர் அவற்றை கவிழ்க்கவும் செய்யும் மனநிலையிலிருந்து விடுபடவில்லை என்று கட்சியின் அரசியல் தீர்மானம் குறிப்பிட்டுள்ளது. கடந்த காலங்களில் சரண்சிங், சந்திரசேகர், தேவ கவுடா மற்றும் ஐ கே குஜ்ரால் ஆகியோரின் அரசுகளை காங்கிரஸ் கவிழ்த்துள்ளது என்று அத்தீர்மானம் குறிப்பிட்டுள்ளது.

கட்சியின் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போது நிதிஷ் ஐக்கிய ஜனதாதளத்துடன் எந்தக் கட்சி இணைந்தாலும் அக்கூட்டணியே வென்றுள்ளது. பாஜகவுடன் இணைந்தபோதும் பின்னர் 2015 ல் லாலு கட்சியுடன் இணைந்த போதும் ஐக்கிய ஜனதா தளம் வென்றுள்ளது என்று அவர் கூறினார். ஆனால் லாலு 2010 ஆம் ஆண்டில் ராம் விலாஸ் பஸ்வானுடனு இணைந்து தோல்வியே கண்டார். இன்று பஸ்வான் பாஜக கூட்டணியில் உள்ளார், எனவே எதிர்காலம் குறித்து லாலுதான் கவலைப்பட வேண்டும் என்றார். சரத் யாதவ் தனது பாதையை தேர்வு செய்து கொள்ளலாம் என்று கூறிய நிதிஷ் முழுக் கட்சியும் தன் பின்னால் நிற்பதையும் சுட்டிக்காட்டினார். சரத் யாதவ் தனது மகனை மாதேபுரா தொகுதியின் உறுப்பினராக ஆக்குவதற்கே லாலு பின்னால் அணி திரண்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com