சரத்பவார் ஆஸ்பத்திரியில் அனுமதி

சரத்பவார் 2 நாட்கள் மருத்துவமனையில் இருப்பார் என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரத்பவார் ஆஸ்பத்திரியில் அனுமதி
Published on

புனே,

மூத்த அரசியல்வாதியும் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான சரத்பவார் நீர்சத்து குறைபாடு காரணமாக புனேயில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டார்.

85 வயதான அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், 2 நாட்கள் அவர் மருத்துவமனையில் இருப்பார் என்றும், அதன்பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சரத்பவார் ஏற்கனவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 14-ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com