தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து சரத் பவார் விலகல்! அடுத்த தலைவர் யார்...?

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக சரத்பவார் அறிவித்துள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து சரத் பவார் விலகல்! அடுத்த தலைவர் யார்...?
Published on

மும்பை,

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார், தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இனிமேல் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடப்போவது இல்லை என்றும், கூடுதல் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளப்போவது இல்லை என்றும் அவர் அறிவித்துள்ளார்.

தான் எழுதிய 'லோக் மாஜே சங்கதி' என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் சரத் பவார் இதனை அறிவித்தார். அடுத்த ஆண்டு மராட்டிய மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சரத்பவாரின் இந்த அறிவிப்பு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com