சரத்பவார் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறாரா? மகள் சுப்ரியா சுலே பதில்

தேசியவாத காங்கிரஸ்(எஸ்.பி.) தலைவர் சரத்பவார் தனது பிறந்தநாளில் அரசிய லில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக பரவிய தகவலை, அவரது மகளும், எம்.பி.யுமான சுப்ரியா சுலே திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
சுப்ரியா சுலே
சுப்ரியா சுலே
Published on: 

அரசியலில் இருந்து ஓய்வா?

மூத்த அரசியல் தலைவரும், தேசியவாத காங்கிரஸ்(எஸ்.பி.) கட்சித்தலைவருமான சரத்பவார், அடுத்த மாதம்(டிசம்பர்) 12-ந்தேதி தனது பிறந்தநாளன்று தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதனால் மராட்டிய அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த தகவலுக்கு சரத்பவாரின் மகளும், எம்.பி.யுமான சுப்ரியா சுலே நேற்று மறுப்பு தெரிவித்தார். நாக்பூரில் நிருபர்களிடம் அவர் கூறுகையில், "எனது தந்தை சரத்பவார் இன்னும் 5 ஆண்டுகள் பதவிக்காலம் கொண்ட மாநிலங்களவை (ராஜ் யசபா) எம்.பி.யாக உள்ளார். யார் ஓய்வு பெறுவார்கள் என்பதை மக்கள்தான் முடிவு செய்வார்கள்" என்றார்.

முதல்-மந்திரி பட்னாவிஸ் கருத்து

மேலும் நாக்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசிடம், சரத்பவாரின் ஓய்வு குறித்த பேச்சுகள் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் கூறியதாவது:- சரத்பவார் ஓய்வு பெறுவது குறித்து விவாதிப்பது பொருத்தமானதல்ல. அவர் தனது வாழ்க்கையில் ஒருபோதும் ஓயமாட்டார்.

தொடர்ந்து ஆக்கப்பூர்வமான பணிகளை செய்துகொண்டே இருப்பார். இத்தகைய விவாதங்களுக்கு எந்த அடிப்படையும் இல்லை. சரத்பவார் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க நாங்கள் வாழ்த்துகிறோம். அவர் இன்றும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார். நான் அவரை மிக அருகில் இருந்து பார்த்துள்ளேன். பல்வேறு திட்டங்கள் மற்றும் பணிகளில் அவர் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறார். எனவே, அவரது ஓய்வு குறித்துப்பேசுவது சரியானதல்ல"இவ்வாறு அவர் கூறினார்.

X