சரத் பவாருக்கு உடல்நலக்குறைவு - 4 நாட்கள் நிகழ்ச்சி ரத்து

சரத் பவார் அடுத்த 4 நாட்கள் பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்கமாட்டார் என தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் தரப்பு) தெரிவித்துள்ளது.
மும்பை,
தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் தரப்பு) தலைவர் சரத் பவார் (வயது 84). மராட்டிய முன்னாள் முதல்-மந்திரியான சரத் பவார் கட்சி நிகழ்ச்சிகள், பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில், புனே மாவட்டத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் நடந்த நிகழ்ச்சியில் சரத் பவார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். நிகழ்ச்சியில் உரையாற்றியபோது சரத் பவாருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இருமல், மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டதால் அவர் உரையை பாதியில் நிறுத்தினார்.
மேலும், அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. உடல்நலக்குறைவு காரணமாக சரத் பவார் அடுத்த 4 நாட்கள் பொதுநிகழ்ச்சியிலும் பங்கேற்கமாட்டார் என தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் தரப்பு) தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story






