சத்ருகன் சின்கா மனைவி சமாஜ்வாடி கட்சியில் இணைந்தார்

சத்ருகன் சின்காவின் மனைவி சமாஜ்வாடி கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
சத்ருகன் சின்கா மனைவி சமாஜ்வாடி கட்சியில் இணைந்தார்
Published on

லக்னோ,

நடிகர் சத்ருகன் சின்காவின் மனைவியும், நடிகையுமான பூனம் சின்கா சமாஜ்வாடி கட்சியில் நேற்று இணைந்தார். உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவை லக்னோவில் சந்தித்து அவர் முன்னிலையில் பூனம் சின்கா அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.

பா.ஜனதா வேட்பாளரும், மத்திய மந்திரியுமான ராஜ்நாத் சிங்கை எதிர்த்து லக்னோ தொகுதியில் சமாஜ்வாடி கட்சி சார்பில் பூனம் சின்கா போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் சத்ருகன் சின்கா சமீபத்தில் பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com