லஞ்சம் வாங்க மறுத்ததால் அதிகாரியை சுட்டுக்கொன்றேன்: ஓட்டல் அதிபர் வாக்குமூலம்

லஞ்சம் வாங்க மறுத்ததால் அதிகாரியை சுட்டுக்கொன்றேன் என்று இமாச்சல பிரதேசத்தில் அதிகாரியை சுட்டுக்கொன்ற ஓட்டல் அதிபர் தெரிவித்துள்ளார்.
லஞ்சம் வாங்க மறுத்ததால் அதிகாரியை சுட்டுக்கொன்றேன்: ஓட்டல் அதிபர் வாக்குமூலம்
Published on

சிம்லா,

இமாசல பிரதேசத்தில் சோலன் மாவட்டத்துக்கு உட்பட்ட கசாலி பகுதியில் உள்ள சில ஓட்டல்களின் சட்டவிரோத கட்டுமானங்களை இடிக்குமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. எனவே மாநில பொதுப்பணித்துறையில் பணியாற்றி வந்த நகர்ப்புற உதவி திட்ட பெண் அதிகாரி சைல்பாலா சர்மா தலைமையில் ஒரு குழுவினர் கடந்த 1-ந்தேதி இந்த பணியை மேற்கொண்டனர்.

அப்போது சட்டவிரோத கட்டுமானத்தை கொண்டிருந்த ஒரு ஓட்டல் உரிமையாளரான விஜய் சிங் என்பவர், சைல்பாலா சர்மாவை சுட்டுக்கொன்று விட்டு தப்பி ஓடிவிட்டார். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தானாக விசாரணை நடத்தி வருகிறது. தப்பி ஓடிய விஜய் சிங்கை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர். அண்டை மாநிலங்களுக்கும் இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பயனாக உத்தரபிரதேசத்தின் மதுராவில் பதுங்கி இருந்த விஜய் சிங்கை, அந்த மாநில போலீசார் உதவியுடன் நேற்று இமாசல பிரதேச போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில், லஞ்சம் பெற மறுத்ததாலே அதிகாரியை சுட்டுக்கொன்றதாக ஓட்டல் அதிபர் போலீசாரிடம் கூறியதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தனது தாயார் அதிகாரியின் காலில் விழுந்து கெஞ்சியதாகவும், ஆனால், இதை பொருட்படுத்தாத அதிகாரி ஷைல் பாலா, உச்ச நீதிமன்ற ஆணை தன்னிடம் இருப்பதாகவும் அதை நிறைவேற்றுவது கடமை என கூறி பின் வாங்க மறுத்ததாலும்தான் ஆத்திரத்தில் சுட்டதாக, ஓட்டல் அதிபர் விஜய்சிங் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com