ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே படுகொலை: வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் அஞ்சலி

டெல்லியில் உள்ள ஜப்பான் தூதரகத்திற்கு நேரில் சென்று அந்நாட்டு தூதர் சடோஷி சுசுகியிடம் தனது இரங்கலை தெரிவித்தார்.
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே படுகொலை: வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் அஞ்சலி
Published on

புதுடெல்லி,

ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமராக இருந்தவர் ஷின்ஜோ அபே (வயது 67). கடந்த 2006-07, 2012-20 ஆகிய காலகட்டங்களில் ஜப்பானின் பிரதமர் பதவி வகித்தவர். இவர், நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள நாரா நகர ரெயில் நிலையம் முன்பு தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவருக்கு பின்னால் நின்று கொண்டிருந்த நபர் அவரை துப்பாக்கியால் சுட்டார்.

இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் அறிவித்தனர். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உட்பட பல்வேறு உலக தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர்.

இந்த நிலையில், ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மறைவிற்கு இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இரங்கல் தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள ஜப்பான் தூதரகத்திற்கு நேரில் சென்று ஷின்சோ அபேயின் மறைவிற்கு அந்நாட்டு தூதர் சடோஷி சுசுகியிடம் தனது இரங்கலை தெரிவித்தார்.

ஜப்பான் தூதரகத்தில் வைக்கப்பட்டிருந்த ஷின்சோ அபேயின் படத்திற்கு இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் அஞ்சலி செலுத்தினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com