மராட்டியத்தில் வளர்ந்து வரும் புதிய அரசியல் சமன்பாடுகள் பாஜகவுக்கு வலியை ஏற்படுத்தி உள்ளது - சிவ சேனா

மராட்டியத்தில் வளர்ந்து வரும் புதிய அரசியல் சமன்பாடுகள் பாஜகவுக்கு வலியை ஏற்படுத்தி உள்ளது என சிவ சேனா கூறி உள்ளது.
மராட்டியத்தில் வளர்ந்து வரும் புதிய அரசியல் சமன்பாடுகள் பாஜகவுக்கு வலியை ஏற்படுத்தி உள்ளது - சிவ சேனா
Published on

மும்பை

மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க சிவசேனா தீவிரம் காட்டி வருகிறது. குறைந்தபட்ச செயல்திட்டம், அதிகாரப்பகிர்வு என சிவசேனாவின் ஆட்சி அமைக்கும் நகர்வுகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

இந்த நிலையில், மராட்டியத்தில் ஆட்சி அமைப்போம் என பாரதீய ஜனதா மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் நேற்று கூறினார்.

இந்த நிலையில் சிவ சேனா தனது கட்சி பத்திரிகையான சாம்னாவின் தலையங்கத்தில் ஜனாதிபதி ஆட்சி என்ற போர்வையில் குதிரை வர்த்தகம்' என்ற தலைப்பில் தனது முன்னாள் கூட்டணி கட்சியான பாரதீய ஜனதாவை விமர்சித்து உள்ளது. மராட்டியத்தில் வளர்ந்து வரும் புதிய அரசியல் சமன்பாடுகள் பாஜகவுக்கு வலியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் பாரதீய ஜனதா தனது பலவீனத்தை மறைக்க தேசியவாத காங்கிரஸ்-சிவ சேனா- காங்கிரஸ் கூட்டணி அரசு அமைந்தால் ஆறு மாதங்களுக்குள் வீழ்ச்சியடையும் என்று சபித்து வருகிறது என குற்றம்சாட்டி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com