மழைநீரில் தேங்கிய குப்பை, கழிவுகளை ஒப்பந்ததாரர் தலை மீது கொட்டிய எம்.எல்.ஏ.

எம்.எல்.ஏ ஒப்பந்தக்காரர் தனது வேலையைச் செய்யாததால், மக்களுக்கு சிரமத்தை ஏற்பட்டது அதனால் தான் அப்படி ந்டந்து கொண்டதாக எம்.எல்.ஏ கூறினார்
Image courtesy :indianexpress.com
Image courtesy :indianexpress.com
Published on

மும்பை:

மராட்டிய மாநிலம் மும்பையில் பெய்துவரும் கனமழையால் குர்லாவில் சஞ்சய் நகர், சுந்தர் பாக் போன்ற பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.

கன்டிவெலி பகுதியில் உள்ள பாதாளச் சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டு, மழைநீர் வடிவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அந்தத் தொகுதி சிவசேனா எம்.எல்.ஏ திலீப் லாண்டே, தூர்வாரும் பணிக்கு டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரரை வரவழைத்து, அவரைக் கட்டாயப்படுத்தி மழைநீர் தேங்கிக் கிடக்கும் சாலையில் அமர வைத்தார். பின்னர், அங்கு நின்றிருந்த இரண்டு பேரை அழைத்து, ஒப்பந்ததாரர் மீது குப்பையை அள்ளிப்போடச் செய்தார். இவரது செயல், அங்கிருந்தவர்களை அதிர்ச்சியை ஏற்படுத்தச் செய்தது.

இதுகுறித்து எம்.எல்.ஏ. திலீப் லாண்டே, கூறுகையில், சாக்கடை கால்வாய் தூர்வாருவதற்கான ஒப்பந்தத்தை எடுத்திருப்பவர்கள் அப்பணியை சரிவர மேற்கொள்ளாததால், மழைக்காலத்தில் சாலைகளில் மழைநீர் தேங்குகிறது. எம்எல்ஏவாக இருக்கும் நான், தேர்ந்தெடுத்திருக்கும் மக்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டிய கடமை எனக்குள்ளது. அதனால், அவ்வாறு செய்தேன் என கூறினார்.

நகரம் முழுவதும் அனைத்து வடிகால்களும் சுத்தம் செய்யப்பட்டுள்ளதாக மும்பை மேயர் கூறியுள்ளார். இப்போது அவர்களின் பொய்கள் வெளிப்படையாக வெளிவருகின்றன, அவர்கள் சிறிய ஒப்பந்தக்காரர்களை துன்புறுத்துகிறார்கள். மேயர் மற்றும் கமிஷனர் மீது அவர் அத்தகைய நடவடிக்கை எடுக்க முடியுமா? என்று பாஜகவை சேர்ந்த வினோத் மிஸ்ரா கேட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com