பத்ரா சால் முறைகேடு வழக்கு: சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத்தின் நீதிமன்ற காவல் 19-ந் தேதி வரை நீட்டிப்பு!

சஞ்சய் ராவத்தின் நீதிமன்ற காவலை கடந்த 5-ந் தேதி வரை நீட்டித்து கோர்ட்டு உத்தரவு பிறப்பித்திருந்தது.
பத்ரா சால் முறைகேடு வழக்கு: சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத்தின் நீதிமன்ற காவல் 19-ந் தேதி வரை நீட்டிப்பு!
Published on

மும்பை,

பத்ரா சால் நில மோசடி வழக்கில் சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத்தின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 19ம் தேதி வரை நீட்டித்து சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மும்பையில் 'பத்ரா சால்' என்ற குடிசை சீரமைப்பு திட்டத்தில் ரூ.1,000 கோடிக்கும் மேல் முறைகேடு நடந்ததாக கூறப்படும் வழக்கில் பிரவின் ராவத் கடந்த பிப்ரவரி மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளரும் எம்.பி.யுமான சஞ்சய் ராவத்துக்கு நெருக்கமானவராக கருதப்படும் பிரவின் ராவத் கைதை தொடர்ந்து, சஞ்சய் ராவத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

இந்த முறைகேட்டில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக சஞ்சய் ராவத்தை கடந்த மாதம் அதிரடியாக கைது செய்தனர். முதலில் அமலாக்கத்துறை காவலில் ஒப்படைக்கப்பட்ட அவர் கடந்த மாதம் 8-ந் தேதி நீதிமன்ற காவலுக்கு மாற்றப்பட்டார்.

மேலும், சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்தின் நீதிமன்ற காவலை கடந்த 5-ந் தேதி வரை நீட்டித்து கோர்ட்டு உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த நிலையில், சஞ்சய் ராவத்தின் நீதிமன்ற காவல் செப்டம்பர் 19ம் தேதி வரை நீட்டித்து பணமோசடி தடுப்புச் சட்டம் (பி.எம்.எல்.ஏ) சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதனைதொடர்ந்து சஞ்சய் ராவத் சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com