ஆட்சி அமைக்க உரிமை கோரி சிவசேனா உள்ளிட்ட 3 கட்சிகளும் ஆளுநர் மாளிகையில் கடிதம் சமர்பிப்பு

மராட்டியத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரி சிவசேனா உள்ளிட்ட 3 கட்சிகளும் ஆளுநர் மாளிகையில் கடிதம் சமர்பித்துள்ளன.
ஆட்சி அமைக்க உரிமை கோரி சிவசேனா உள்ளிட்ட 3 கட்சிகளும் ஆளுநர் மாளிகையில் கடிதம் சமர்பிப்பு
Published on

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டணி அரசு அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்த நிலையில், சனிக்கிழமை அதிகாலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரியாகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டசபை கட்சி தலைவர் அஜித் பவார் துணை முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்றனர். இதனால் தேசியவாத காங்கிரசில் பிளவு ஏற்பட்டது.

அஜித் பவாரின் முடிவு கட்சியின் முடிவு அல்ல என்றும், பாஜகவுடன் கூட்டணி அமைக்கவில்லை என்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் உடனடியாக விளக்கம் அளித்தார். அத்துடன் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் ரிட் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு மீது, நாளை காலை 10.30 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

இதற்கு மத்தியில், தங்கள் கூட்டணிக்கு ஆதரவு அளிக்கும் எம்.எல்.ஏக்கள் கடிதத்தை ஆளுநர் மாளிகையில் 3 கட்சிகளின் மூத்த தலைவர்களும் சமர்பித்துள்ளனர். சிவசேனா 63, காங்கிரஸ் 44, தேசியவாத காங்கிரஸ் 51 என மொத்தம் 162 எம்.எல்.ஏக்களின் கையெழுத்துடன் ஆதரவு கடிதம் சமர்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. சமாஜ்வாடி கட்சியின் 2 எம்.எல்.ஏக்களும் சிவசேனா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

288 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட மராட்டிய சட்டமன்றத்தில் பெரும்பான்மைக்கு 145 உறுப்பினர்களின் ஆதரவு அவசியம் ஆகும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com