

திருப்பதி,
தெலுங்கானாவில் வருகிற 15-ம் தேதி முதல் மதுபான விலையை உயர்த்த வேண்டும் என மதுபானம் தயாரிப்பு நிறுவனங்கள் மாநில அரசுக்கு அழுத்தம் கொட்த்து வருகிறது. மூல பொருட்கள் விலை ஏற்றம் மற்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக போக்குவரத்து செலவுகள் கடுமையாக உயர்ந்துள்ளன.
எனவே மதுபான விலையை உயர்த்த வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்ற மாநில அரசு மதுபான விலையை உயர்த்த முடிவு செய்துள்ளது.
பாட்டிலுக்கு எவ்வளவு விலை உயர்த்தப்படும் எனதெரிவிக்கப்படவில்லை மதுபான விலை உயர்வால் மது பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.