ஆந்திராவில் அதிர்ச்சி: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தூக்கிட்டு தற்கொலை

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திராவில் அதிர்ச்சி: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தூக்கிட்டு தற்கொலை
Published on

அமராவதி,

ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம் பட்டலப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பலபு சுதாகர் (வயது 36). ஆட்டோ டிரைவரான இவருக்கு 2 மூத்த சகோதரிகளும், ஒரு இளைய சகோதரியும் இருந்தனர். 2 மூத்த சகோதரிகளுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இதில் ஒருவருக்கு 15 வயதில் மகள் உள்ளார்.

அதேவேளை, கருத்து வேறுபாடு காரணமாக கணவர்களை பிரிந்த சுதாகரின் 2 சகோதரிகளும் சுதாருடன் வசித்து வந்தனர். அதன்படி, சுதாகர் அவரது 3 சகோதரிகள் மற்றும் சகோதரியின் 15 வயது மகள் என 5 பேரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

5 பேர் தற்கொலை

அதேவேளை, ஆட்டோ டிரைவரான சுதாகருக்கும் அவரது சகோதரிகளுக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. மேலும், குடும்பத்தினர் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளனர்.

இதனால், விரக்தியடைந்த சுதாகர் தனது சகோதரிகள் மற்றும் சகோதரியின் மகள் என 5 பேரும் ஆட்டோவில் நந்தியால் மாவட்டம் ஸ்ரீசைலம் நகருக்கு வந்துள்ளனர். அங்கு ஒரு ஓட்டலில் அறை எடுத்து 5 பேரும் தங்கியுள்ளனர்.

பின்னர், அந்த ஓட்டல் அறையிலேயே 5 பேரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர். அறை பல மணிநேரம் திறக்கப்படாமல் பூட்டியே கிடந்ததால் சந்தேகமடைந்த ஓட்டல் ஊழியர்கள் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்துள்ளனர். அங்கு அறையில் 5 பேரும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், 5 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com